Jeeva Ootru

கிளிநொச்சி மாவட்டத்தில் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் மாவட்ட அலுவலகம் ஆரம்பித்து வைக்கப்பட்டமை

ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் மாவட்ட அலுவலகமும், தையல் பயிற்சிக்கான ஆரம்ப நிகழ்வும் கொடியேற்றத்துடன் ஆரம்பம் .

கிளிநொச்சி மணியங்குளம் பிரதேசத்தில் ஜீவ ஊற்று அன்பின் கரத்திற்கான மாவட்ட அலுவலகம், தையல் பயிற்சிக்கான ஆரம்ப நிகழ்வும் (15.07.2025) அன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

முதல் நிகழ்வாக விருந்தினர்கள் பிரதான வாயிலில் இருந்து வரவேற்று வரப்பட்டு தேசியக் கொடியேற்றப்பட்டு அதனை தொடர்ந்து ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் கொடியேற்றத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தது.

ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் தலைவர் ஞானப்பிரகாசம் தயாளினி தலைமையில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கிராமசேவகர் சுதர்சன் சர்மிளா, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் துஸ்யந்தன் சாந்தகுமாரி, ஜீவ ஊற்று அன்பின் கரம் உப தலைவர் எஸ்.சீலன், கிளிநொச்சி, முல்லைத்தீவு உறுப்பினர்கள், கரைச்சி பிரதேச சபை உறுப்பினர், வணங்காமண் மறுவாழ்வு கழகத்தின் தலைவர் ஜீவா, வன்னி தமிழ்மக்கள் ஒன்றியத்தினர், கிரிவலம் அறக்கட்டளையினர், பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

5
6
Whatsaap1
2 (1)
3